Site icon itamiltv.com

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் – பிரேமலதா பேச்சு!

திருப்பரங்குன்றம் மலையில் முருகன் அருளால் தீபம் ஏற்றப்படும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உறுதியாக தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், இந்த தொகுதியில் வெற்றி பெற மக்கள் ஆதரவு அவசியம் என கூறினார்.

கிருத்திகா ஒரு பொறியியல் பட்டதாரி என்றும், தனது ஐடி நிறுவனத்தின் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கியவர் என்றும் பாராட்டினார்.

தொகுதி வளர்ச்சிக்காக மல்லிகை பூ தொழிற்சாலை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற முக்கிய திட்டங்களை கொண்டு வர முயற்சி எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து முன்பு கூறப்பட்டாலும், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என விமர்சித்தார்.

முருகன் அருளால் மக்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்றும், கிருத்திகா வெற்றி பெற்றால் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் கூறினார்.

ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

மேலும், தன்னைப் பற்றிய செய்திகள் தவறாக வெளியிடப்பட்டுள்ளதாக கூறி, ஊடகங்களுக்கு கவனமாக செய்தி வெளியிட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

Exit mobile version