திருப்பூரில் காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்து, தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் சத்யஸ்ரீ. 21 வயதான இவர் தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் இவரும், காட்டுமன்னார்குடியை சேர்ந்த நரேந்திரனும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது
இந்த நிலையில் இன்று காலை தனது காதலியை பார்க்க அவர், பணி புரியும் இடத்திற்கு நரேந்திரன் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியால், காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அதே கத்தியால் தானும் அறுத்து கொண்டார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் காதலி சத்யஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் நரேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து வேசானை மேற்கொண்டு வருகிறனர். இளைஞர் தனது காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது