நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் 75வது படத்தின் டைட்டில் Glimpse வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இந்திய திரையுலகில் கால்பதித்து தனது கடின உழைப்பால் தற்போது வேர்ல்ட் பேமஸ் நடிகையாக உருமாறியுள்ளவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவருக்கு உலகம் முழுவதும் ஏரளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது .
ஒரு பக்கம் குடும்பம் ஒரு பக்கம் நடிப்பு மறுபக்கம் அழகு சாதன தொழில் என படு பிசியாக இருக்கும் நயன்தாராவின் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தின் பெயர் தான் அன்னபூரணி .
நிலேஷ் கிருஷ்ணா இயக்கி வரும் இப்படம் நயன்தாராவின் 75 வது என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் இப்படத்தின் நயன்தாராவுடன் ஜெய், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா, சத்யராஜ், குமாரி சச்சு, அச்சு குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பூர்ணிமா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் .
இந்நிலையில் தமன் இசையைக்கும் இப்படத்திற்கான டைட்டில் Glimpse வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது . ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த நயன்தாரா சிக்கன், மட்டன் புகைப்படங்களை வீட்டுக்கு தெரியாமல் மறைந்து பார்க்கும் காட்சிகள் கொண்ட இப்படத்தின் டைட்டில் Glimpse வீடியோ தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
இதோ நீங்களும் அந்த Glimpse வீடியோவை பாருங்கள்…