பாபர் மசூதி இடிக்கப்பட்ட இன்று (டிசம்பர் 6) தமுமுக சார்பில் ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள்;
`450 ஆண்டுகாலத்திற்கும் மேலாக அயோத்தியின் வரலாற்று சிறப்புமிக்க தலமான பாபர் மசூதி , உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் , இந்நாட்டின் சட்டங்களையும் மீறி மதவாத கும்பலால் டிசம்பர் 6 , 1992ம் ஆண்டு பட்டப்பகலில் இடித்து தகர்க்கப்பட்டது
பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமான குற்றவாளி 17 ஆண்டுகால நெடிய ஆய்வுக்குப்பிறகு நீதிபதி லிபரான் ஆணையம் பட்டியல் போட்டது. ஆனால் அக்குற்றத்திக்காக ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை .
பாபர் மசூதி எந்த ஒரு கோவிலையும் இடித்துவிட்டு கட்டப்படவில்லை. பாபரி மசூதி கீழ் எந்தக் கோவிலும் இல்லை 1949 டிசம்பர் 22 ல் அங்கு அத்துமீறி சிலைகள் வைக்கப்பட்டன். 1992 டிசம்பர் 6 அன்று சட்ட விரோதமாக பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது.
முஸ்லிம்கள் தரப்பு கூறிய அனைத்தையும் , தீர்ப்புரையில் உண்மை என குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், பாபரி மஸ்ஜித் நின்றிருந்த நிலத்தை , பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கை என்னும் அடிப்படையில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி நிலத்தை இந்துத்துவ அமைப்பினரிடம் ஒப்படைத்து தீர்ப்பு வழங்கியது.
மேலும் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலத்தை ஆறுதல் பரிசாக வழங்கியது. பாபரி மஸ்ஜித் நிலம் , இந்துத்துவ அமைப்புக்கு இந்த நிலம் உரியதில்லை என்று நன்கு தெரிந்தும், அவ்விடம் நீதிமன்றத்தால் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்படாமல் இந்துத்துவ அமைப்பினருக்கு நிலம் வழங்கப்பட்டது.
மேலும் வருங்காலங்களில் இந்துத்துவ அமைப்பினர் குறிவைக்கும் காசி, மதுரா பள்ளிவாசல்கள் பாதுக்காக்கப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தபட வேண்டும்” என ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர்.