பள்ளிக்கல்வியில் இந்தியாவிலேயே வளர்ச்சி கண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற நம்ம ஊரு நம்ம பள்ளி மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அங்கு சுரப்புரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது :
பள்ளிகளில் உட்கட்டமைப்பு, இடைநிற்றல் இல்லா மாநிலம் ஆகியவற்றில் இந்திய அளவில் தமிழ்நாடு தான் முதன்மையாக உள்ளது.
Also Read : அரைகுறை ஆடையில் தரக்குறைவாக நடந்துகொண்ட ஜெயிலர் பட வில்லன்..!!
தமிழ்நாட்டை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான், அதை மாற்ற முடியாது. பள்ளி கல்வித்துறை மீதான விமர்சனம், பாராட்டு இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிறோம். தவறெனில் உடனே திருத்திக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் திட்டங்களை மற்ற மாநில அமைச்சர்களும், அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு தங்கள் மாநிலத்தில் செயல்படுத்துவது எங்களுக்கு பெருமைமாக உள்ளது.
பள்ளிக்கல்வியில் இந்தியாவிலேயே வளர்ச்சி கண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.