தமிழக அரசு அதிரடி.. -அரசு துறைகளில் 100% தமிழக இளைஞர்களுக்கே வேலை..!

Spread the love

தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 100% வேலை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்;

தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதி தேர்வாக கட்டாயமாக்கப்படும் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.


Spread the love
Related Posts