அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அரசியல் தலைவர்கள் , திரை நட்சத்திரங்கள் என பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read : அண்ணா பல்கலை.வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!!
இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்த மாணவர்கள் , அரசியல் கட்சியினர் என பலரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் முன் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நாளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை பகல் 12.30 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்ய இருக்கிறார்.
POSH கமிட்டியிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது