ஐ.டி. ஊழியர்கள், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று சகோதரர்கள் – அலேக்காக தூக்கிய போலீசார்

சென்னையில் உள்ள ஐ.டி. ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்த சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தாம்பரம் பகுதியில் ஐ.டி. ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சகோதரர்கள் இருவர் கஞ்சா விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .

இதையடுத்து தாம்பரம் கல்யாண் நகரில் உள்ள சகோதரர்கள் வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு கிலோ கஞ்சா, 10 லட்சம் பணம் சிக்கியது .

பின்னர் ஒரு கிலோ கஞ்சா, மற்றும் 10 லட்சம் ருபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் சகோதரர்கள் இருவரையும் கைது செய்தனர் .

பிடிப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் முக்கிய ரவுடிகளின் பெயர்கள் வெளிவந்துள்ளதாகவும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Total
0
Shares
Related Posts