கர்நாடகாவின் பெங்களூருவில் தமிழக பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அதிர வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
37 வயதான பெண் ஒரு கடந்த ஞாயிறு (ஜன.19) இரவு கே.ஆர். சந்தை பகுதியில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். யெலகங்கா பகுதிக்கு பேருந்து உள்ளதா என அங்கிருந்தவரிடம் அந்த பெண் கேட்டுள்ளார்.
அப்போது பேருந்து நிறுத்தம் அருகே இருப்பதாக கூறி அந்த பெண்ணை அந்த நபர் அழைத்துச் சென்றுள்ளார்
குடோன் தெரு பகுதிக்கு அந்த பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்ற அந்த நபர் பெண்ணிடம் பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தி செல்போன், நகை, பணத்தை பறித்துள்ளார்.
Also Read : சாம்பியன்ஸ் டிராபி : பாகிஸ்தான் பெயரை ஜெர்ஸியில் அச்சடிக்க மறுக்கும் பிசிசிஐ..?
இதில் பாதிக்கப்பட்ட அந்த மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு தற்போது பெண் பெங்களூருவில் உள்ள காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் கே.ஆர்.சந்தை பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களான இரு குற்றவாளிகளையும் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கணவருடனான சண்டையால் சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் இருந்து பெங்களூரு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.