Site icon ITamilTv

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று வரலாற்று சாதனை! தமிழக வீரர் குகேஷிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!!!

Gukesh

Gukesh

Spread the love

செஸ் கேண்டிடேட்ஸ் தொடர் கனடாவில் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ( Gukesh ) இந்த செஸ் கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெரும் நபர் செஸ் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெறுவதற்கான போட்டியில் கலந்துக் கொள்ள தகுதி பெறுவார். அதாவது இந்த போட்டியின் வெற்றியாளர், தற்போதைய உலக செஸ் சாம்பியனான டிங் லிரெனை உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் எதிர்கொள்வார்.

செஸ் கேண்டிடேட்ஸ் தொடரில், இந்தியா சார்பில் இளம் கிராண்ட் மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி ஆகியோரும் பெண்கள் பிரிவில் ஆர் வைஷாலி, ஹொனேரு ஹம்பி ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த தொடரின் 13 சுற்றுகள் முடிவில் தமிழகத்தின் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னணியில் இருந்தார். மேலும் அமெரிக்காவின் பேபியானோ கருவானா,ஹிக்காரு நாக்கமூரா, ரஷ்யாவின் இயான் நிப்போம்னிசி மூவரும் 8 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் இருந்தனர்.

Also Read : கும்பகோணத்தில் கஞ்சா போதையில் இளைஞர்கள் செய்த அட்டூழியம் – இபிஎஸ் வேதனை

நேற்று நள்ளிரவு நடந்த 14 சுற்றில் 17 வயதான குகேஷ், அமெரிக்காவின் கிஹாரு நகமுராவையும், அமெரிக்காவின் ஃபேபியானோ கருணாவும், ரஷ்யாவின் இயான் நெப்போம்னியாச்சியும் எதிர்கொண்டனர் இரண்டு போட்டிகளும் டிராவில் முடிய, 4 போட்டியாளர்களும் தலா ½ புள்ளிகள் பெற்றனர்.

இதனால், புள்ளிகள் அடிப்படையில் குகேஷ் 9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். மேலும் 2024 FIDE கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் இளம் சாம்பியனாக வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.

செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு, கேண்டிடேட்ஸ் போட்டியை வென்ற 2ஆவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இந்த நிலையில் இளம் வயதில் பட்டம் வென்ற குகேஷிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நம்பமுடியாத சாதனையைப் படைத்த குகேஷிற்கு வாழ்த்துக்கள்.

17 வயதில், FIDE கேண்டிடேட்ஸில் வெற்றியைப் பெற்ற முதல் ( Gukesh ) இளைஞராக வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான டிங் லிரனுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்


Spread the love
Exit mobile version