ஆவடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியதாவது :
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, கிரி நகர் குடியிருப்பு பகுதியில், சென்னை, ஆவடியைச் சேர்ந்த திரு.தேவன் (வயது 50) மற்றும் சென்னை, பட்டாபிராமைச் சேர்ந்த திரு.மோசன், (வயது 39) ஆகிய 2 ஒப்பந்தத் தொழிலாளர்களும் நேற்று (7-9-2023) காலை செப்டிக் டேங்கை சுத்தம் செய்த போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.