தமிழ்நாடு முழுவதும் ரூ.264 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 956 புதிய வகுப்பறைக் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.
தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள், 12 ஆய்வகக் கட்டடங்களையும் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
Also Read : பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம் – தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.
இதையடுத்து திருவண்ணாமலையில் முதன்மை கல்வி அலுவலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தையும் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.