தருமபுரி மாவட்டத்திற்கு 7 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்
‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்தார் . இதையடுத்து அம்மாவட்டத்தில் உள்ள பாளையம்புதூரில் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்திற்கு 7 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் :
அரூர் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
₹51 கோடி மதிப்பில் அரூர் அரசு மருத்துவமனை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
வெண்ணாம்பட்டி சாலையில் ரயில்வே மோம்பாலம் ₹31 கோடியில் மேம்படுத்தப்படும்.
பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைகட்டுகள் ₹50 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும்.
அரசநத்தம் பகுதியில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் சாமை, ராகி ஆகியவற்றை மதிப்புக்கூட்டு பொருளாக்க கிடங்கு மற்றும் பொதுசெயலாக்க மையம் அமைக்கப்படும்.
தீர்தமலையில் துணை வேளாண்மை விரிவாக்கம் அமைக்கப்படும்.
பளையம்புதூர் அரசு பள்ளியில் பழுதடைந்த நிலையில் 4 வகுப்பறைகள் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.