2 நாள் பயணமாக மதுரை சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 61வது குருபூஜை மற்றும் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு 2 நாள் பயணமாக மதுரை சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அவரை தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மதுரை மேயர் உள்ளிட்டோரும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து மதுரை தெப்பக்குளத்தில் அமைந்துள்ள, மாமன்னர்கள் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து மதுரையில் அமையவுள்ள 2 புதிய மேம்பாலங்களுக்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோரிப்பாளையம் சந்திப்பில் ₹190.40 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலமும் மதுரை – தொண்டி சாலையில் அப்போலோ சந்திப்பில் ₹150.28 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலமும் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.