இந்தியாவின் ஜனநாயக அமைப்பை பாஜக சிதைக்கிறது – ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா பாட்காஸ்டில் முதல்வர் ஸ்டாலின் உரை..!!

இந்தியாவின் ஜனநாயக அமைப்பை பாஜக சிதைத்து வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா பாட்காஸ்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :

இந்தியா என்பது கூட்டாட்சி தன்மைகொண்ட நாடு ,பல்வேறு அழகிய மலர்கள் நிறைந்த அற்புத பூந்தோட்டம் ஆர்.எஸ்.எஸ். விரும்பும் சர்வாதிகார ஆட்சியை அமைக்க பாஜக முயற்சிக்கிறது.

முதலமைச்சராக மாநில உரிமை பற்றி பேசிய மோடி, பிரதமராகி மாநில உரிமைகளை பறிக்கிறார். மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது.

சிஏஜி மூலம் பாஜகவின் ஊழலை அம்பலப்படுத்திய அதிகாரிகளை விரைவாக கூண்டோடு மாற்றியுள்ளது பாஜக அரசு.

மாநில சுயாட்சி கொள்கை வெல்ல வேண்டுமென்றால்,இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். இந்தியாவை INDIA கூட்டணியிடம் ஒப்படையுங்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts