தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியர் மற்றும் காவல்துறை, உயரதிகாரிகள் ஆலோசனை மாநாடு தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று தொடங்கியுள்ளது .
சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2 நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆட்சியர் மற்றும் காவல்துறை, வனத்துறை உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொள்ளும் இந்த ஆலோசனை மாநாட்டில் அரசின் புதிய அறிவிப்புகள், திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.