சூரி மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி காம்போவில் தரமாக தயாராகி உள்ள ‘விடுதலை 2’ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படமே ‘விடுதலை’ திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இவர்களுடன் பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
முதல் கொடுத்த மாபெரும் வெற்றிக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வந்த நிலையில் இப்படம் நாளை( டிசம்பர் 20-ம் தேதி) திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது.
தமிழகத்தில் விடுதலை 2 படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.