தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் எப்போது வழங்கப்படும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும். அரிசி, சர்க்கரை, கரும்பு, பொங்கலுக்கு தேவையான பொருள்களுடன் வேட்டி சேலைகளும் வழங்கப்படும்.
Also Read : “கண்ணாடி பாலம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது” – இபிஎஸ்
இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் எப்போது வழங்கப்படும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி 2025 ஜனவரி 3ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.