வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களின் ‘முதல் பயண’ செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் இன்று கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது :
10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் சாரை சாரையாக சேர்ந்து வருகிறார்கள்.
தமிழ்நாடு கல்வித்துறை திமுக ஆட்சியில் மறுமலர்ச்சி அடைந்துள்ளது . திமுக ஆட்சியில் 2022ம் ஆண்டு 75 அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்க சென்றார்கள்.
2023ம் ஆண்டு 274 மாணவர்களும், இந்தாண்டு 447 மாணவர்கள் என இரு மடங்காக அதிகரித்துள்ளது;
புதுமைப் பெண் திட்டத்தின் பயனாக உயர்கல்வியில் மாணவிகள் சேர்க்கை 34% அதிகரித்துள்ளது.
‘நான் முதல்வன்’ இணையதளம் மற்றும் மணற்கேணி செயலியில் கடந்த 10 ஆண்டுகளில் உள்ள பொதுத்தேர்வு வினாத்தாள்கள் உள்ளள;
தேசிய சட்டப்பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் சேர்ந்துள்ளனர்;
தைவான், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் 14 தமிழ்நாட்டு மாணவர்கள் முழு கல்வி செலவை இலவசமாக பெற்றுள்ளார் அந்த மாணவர்களின் முதல் முறை பயணச் செலவை தமிழ்நாடு அரசு ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.