ராணிப்பேட்டை மாவட்டத்தில் விரைவில் தொடங்க உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ காலிப் பணியிடங்களுக்கான முதன்மை தேர்விற்கு கட்டணமில்லா இலவச பயிற்சியில் பங்கு பெற விரும்பும் மாணவ மாணவியருக்கு அழைப்பு விடுத்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்..
“தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ காலிப் பணியிடங்களுக்கான முதன்மை தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
முதல்நிலைத் தேர்வு எழுதிய மாணவ -மாணவிகள் பயன்பெறும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக சிறந்த பயிற்றுனர்களைக் கொண்டு, இலவச பயிற்சி வகுப்புகள், மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க : Vettaiyan Trailer : ரிலீஸானது “வேட்டையன்” ட்ரைலர்!!
இதில் கலந்துகொள்ள விரும்பும் தேர்வர்கள் இவ்வலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்பு அலுவலக வேலை நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களை deoranipet.studycircle@gmail.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளளாம்.
மேலும் மத்திய, மாநில அரசு பணியிடங்களுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற பிரத்யேக இணைய தளத்தில் மென் பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாணவர்களும் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்” என தெரிவித்துள்ளார்.