மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்து நிலையிலும் அனைத்து தரப்பிலும் இந்திய திருநாட்டை முன்னேற்றத்தைப் பாரத்துக்கு எடுத்துச் செல்கின்ற சிறப்பான பட்ஜெட் என ஓபிஎஸ் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் இருந்து மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
பட்ஜெட் தாக்கல் குறித்த கேள்விக்கு:
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்து நிலையிலும் அனைத்து தரப்பிலும் இந்திய திருநாட்டை முன்னேற்றத்தைப் பாரத்துக்கு எடுத்துச் செல்கின்ற சிறப்பான பட்ஜெட் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அந்த பட்ஜெட்டின் சாரம்சத்தை புரிந்து கொண்டு தமிழக அரசு அதை முறையாக மத்திய அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எய்ம்ஸ் குறித்து இந்த பட்ஜெட்டில் அறிக்கை குறித்த கேள்விக்கு:
நிதிநிலை அறிக்கையின் விரிவான பதிலில் அது இடம்பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது
இடையீட்டு மனுக்காக பதில் அளித்தது குறித்த கேள்விக்கு:
நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வருகிறது.
ஈரோடு இடைத்தேர்தலில் சின்னம் குறித்த கேள்விக்கு:
அதிமுக சட்ட விதிப்படி நடந்த அமைப்பு ரீதியான தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக நானும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு 2026 வரை பதவி இருக்கிறது. நான் இரட்டை இலை சின்னத்துக்கு கேட்டு வந்தால் கையொப்பம் விடுவேன்.
வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு பாஜகவில் இருந்து அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு:
முறைப்படியான அறிவிப்பு நானும் பாஜக தலைமையும் அறிவிப்போம்.மேலும் ஒருங்கிணைந்த அதிமுகவை தான் பாஜக எதிர்பார்க்கிறது என்ற கேள்விக்கு, அதிமுகவின் தொண்டர்களும் தமிழக மக்களும் பாஜகவும் அதிமுக ஒன்று பட வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம் எங்களுடைய அறிவிப்பு முறையான அறிவிப்பு தேசிய ஜனநாயக கட்சியில் முறையான அறிவிப்பு வெளியிட வேண்டுமோ அது எங்களிடம் இருந்து வரும்.வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
பட்ஜெட்டில் அடித்தட்டு மக்களுக்கான திட்டங்கள் குறித்த கேள்விக்கு:
அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த நிதிநிலை அறிக்கை சிறப்பான அறிக்கை. அதை பயன்படுத்த வேண்டியது அரசின் கடமையாக உள்ளது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் சிறப்பாக உள்ளது அவர்கள் ஒதுக்குகின்ற நிதியை தமிழக அரசு எடுத்துக் கொண்டு நாட்டின் சுபிட்சத்திற்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக அத்தனை நிலைகளிலும், அத்தனை அம்சங்களிலும் சிறப்பாக இந்த நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. அதை நான் நீண்ட அறிக்கையாக தந்துள்ளேன் அதை படித்தால் உங்களுக்கு நன்றாக புரியும்.
கலைஞர் நினைவுச்சின்னம் குறித்த கேள்விக்கு:
அந்தப் பேனாவை நிறுவுகின்ற இடம் சுற்றுப்புற ஆய்வாளர்கள் கருத்து கேட்டிருக்கிறேன், அங்கு வாழ்கின்ற மீன்களின் வளம் குறித்து கேட்டிருக்கிறேன். மீனவர்களின் கருத்தையும் பல்வேறு மீனவ சங்கங்களின் கருத்துக்களையும் நேரடியாக கேட்டு அறிய உள்ளேன் அதற்குப் பிறகு அதிமுகவின் நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிப்பேன்என்று தெரிவித்துள்ளார்.