இந்த மாதம் முழுவதுமே தங்கம் விலை உயர்ந்து வாடிக்கையாளர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், மகிழ்ச்சி தரும் விதமாக இன்று தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் நேற்றைய தினம் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4,536 ரூபாயாக இருந்த நிலையில், இன்றைய தினம் 4,508 ரூபாயாக ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் நேற்று 36,288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 224 ரூபாய் குறைந்து 36,064 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையை பொறுத்த வரை, சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 69 ரூபாய் 20 காசாக குறைந்துள்ளது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 69,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.