உலககை நடுநடுங்க வைத்த பயங்கரவாதியாக வலம் வந்த ஒசாமா பின்லேடனின் திட்டத்தில் அமெரிக்காவை கிடுகிடுங்க வைத்த இரட்டைக் கோபுர தாக்குதல் நடத்தப்பட்ட தினம் இன்று (11 செப்டம்பர் 2001)
வாஷிங்டனில் இருந்து புறப்பட்ட இரண்டு பயணிகள் விமானத்தைக் கடத்திய ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா பயங்கரவாதிகள், அமெரிக்காவின் வணிகக் கட்டடமான இரட்டைக் கோபுரங்கள் மீது மோதச் செய்து தாக்குதல் நடத்தினர்.
Also Read : பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றோருக்கு பரிசுத்தொகை அறிவித்தது மத்திய அரசு..!!
மேலும் மற்றொரு பயணிகள் விமானத்தைக் கொண்டு பென்டகன் மீதும் தாக்குதல் நடத்தினர். 4வது விமானத்தைக் கடத்தி பென்சில்வேனியா மீது தாக்கினர். இந்தத் தாக்குதல்கள் சுமார் ஒன்றரை மணி நேர இடைவெளியில் நடந்தது.
அமெரிக்காவை உலுக்கிய இந்த கோர தாக்குதலில் 3000 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இரட்டைக் கோபுரங்களும் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாகின .
இந்நிலையில் இந்த துயர சமபவம் நடந்து இன்றோடு 23 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அனைவரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.