ITamilTv

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை..!!

Spread the love

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது .

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 30 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் 31 வது லீக் போட்டியில் பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் மல்லுக்கட்ட உள்ளது.

நடப்பு உலககோப்பை தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள காலிஸ்தான் அணி 2 ல் வெற்றியும் 4ல் தோல்வியடைந்தும் புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

அதேபோல் வங்கதேசம் அணி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 1 ல் வெற்றியும் 5ல் தோல்வியடைந்தும் புள்ளிப் பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று பிற்பகல் நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.


Spread the love
Exit mobile version