தமிழகத்தில் உள்ள முக்கிய ஏரிகளின் இன்றைய (30-10-23) நீர் நிலவரம்..!!

தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கி ஆங்காங்கே வெளுத்துவாங்கி வரும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .

திடீரென பெருமழை பெய்தாலோ பெருவெள்ளம் ஏற்பட்டாலோ அதனை கட்டுப்படுத்தி மக்களை காக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது .

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள சில முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் :

  • 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2589 மில்லியன் கன அடியாக உள்ளது. 159 கன அடி நீர் வெளியேற்றம்
  • 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 579 மில்லியன் கன அடியாக உள்ளது
  • 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 440 மில்லியன் கன அடியாக உள்ளது
Total
0
Shares
Related Posts