ITamilTv

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று மீண்டும் உயர்வு!

Spread the love

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை 10 ரூபாய் அதிகரித்து 40 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது.

குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தை மற்றும் மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் மொத்த விலையில் தக்காளி கிலோவிற்கு 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாயை தாண்டியது.

இந்த நிலையில் தமிழக அரசு தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் உள்ள 500 நியாயவிலைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்தது.

இந்தநிலையில் தக்காளி வரத்து கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்துள்ளது. இதனால் 200 ரூபாய் என்ற உச்சத்தில் இருந்த தக்காளி விலை படிப்படியாக குறைந்து, கடந்த வாரம் ஒரு கிலோ 100 ருபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் விலை சரிந்து 40 ரூபாய்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளியின் விலை நேற்று மேலும் 10 ரூபாய் குறைந்து 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாய் அதிகரித்து 40 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது.


Spread the love
Exit mobile version