TR Balu Controversy Speech-இன்று அரசியல் வந்தவர்களுக்கெல்லாம் நான் பதில் கூற முடியாது தயவு செய்து என்னிடம் அண்ணாமலையை பற்றி கேள்வி கேட்காதீர்கள் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு டி.ஆர்.பாலு பேட்டி அளித்தார்.
நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன ?
மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்பி டிஆர் பாலு தமிழ்நாட்டிற்கு போதிய அளவில் மத்திய அரசு நிதி வழங்குவதில்லை எனவும்,
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் பெய்த கனமழையால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை மத்திய அரசு போதுமான வெள்ள நிவாரண நிதியை வழங்கவில்லை என தெரிவித்தார்.
அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டு பேச முயற்சி செய்தார். இதனால் கோபமடைந்த டி.ஆர். பாலு எல்.முருகனை இருக்கையில் அமரும்படி கூறினார்.
மேலும் நீங்கள் அமைச்சர் பதவியில் இருப்பதற்கே தகுதியற்றவர் என ஆவேசமாக பேசினார்.
இதற்க்கு பாஜகவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் மக்களவையில் திமுகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே அமளி ஏற்பட்டது.
அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, “அவரை எப்படி தகுதியற்றவர் என சொன்னீர்கள்? திமுக அரசுதான் தகுதியற்ற அரசு.
காங்கிரஸ் தகுதியற்ற கட்சி” என்றார். “நீங்கள் ஒரு தலித் அமைச்சரை தகுதியற்றவர் எனக் கூறி ஒட்டுமொத்த பட்டியல் சாதியினரையும் அவமதித்து விட்டீர்கள்” என கடுமையாக குற்றம்சாட்டினார்.
அண்ணாமலை குற்றச்சாட்டு:
பிஃட் ஆன அமைச்சர் என்றால் யார் என்று டி.ஆர்.பாலு சொல்வாரா? கொள்ளை அடிப்பவரா, அப்பா தலைவராக இருப்பார், மகன் அமைச்சராக இருப்பதா?
இல்லை ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் பிஃட் ஆன அமைச்சரா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் மத்திய இணையமைச்சர் முருகனிடம் டி.ஆர்.பாலு பொது இடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
நீங்கள் முருகன் குறித்து தவறாக பேசவில்லை. அவருடைய சமுதாயம் குறித்து தவறாக பேசி உள்ளீர்கள்.
தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த பட்டியலின சகோதர, சகோதரிகளை டி.ஆர்.பாலு தவறாக பேசி உள்ளீர்கள்” என்று கட்டமாக அண்ணாமலை கூறினார்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1755147042153021671?s=20
நாடாளுமன்ற விவகாரம் டிஆர் பாலு விளக்கம்:
நாடாளுமன்ற வளாகத்தில் டிஆர் பாலு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது : பாராளுமன்ற விதிமுறைகளை மதிக்காமல் நான் பேசிக் கொண்டிருக்கும்
பொழுது இடைமறித்து பேசியதால் இடைமறித்து பேசியதை கண்டித்து தவிர அவரை எந்த ஜாதி ரீதியாகவும் நான் பேசவில்லை.
ராமர் கோவில் கட்டி விட்டால் இந்துக்களுக்கும் தலித்துக்களுக்கும் அவர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது அவர்களை எதிர்த்து கேள்வி கேட்ட ராஜா தலித் இல்லாமல் யார்?
பேரிடர் குறித்து கேள்வி போய்க் கொண்டிருக்கும் பொழுது சம்பந்தமே இல்லாமல் மீன்வளத்துறை துணை அமைச்சர் பேசியதால் தான் இந்த பிரச்சனை உருவானது அவை விதிமுறைகள் தெரியாமல் நடந்து கொண்டார்.
மனதிற்குள் ஒன்றி வைத்துக் கொண்டு அரசியல் ரீதியாக ஒன்று பேசுகிறார் அவருக்கு எல்லாம் பதில் கூற முடியாது.
60 65 வருடங்களாக அரசியலில் இருக்கிறோம் இன்று வந்தவர்களுக்கு பதில் கூற வேண்டும் என்ற அளவுக்கு நான் தாழ்ந்தவன் கிடையாது
சம்பந்தமே இல்லாமல் தலித் தலித் என்று கூறிய அரசியல் செய்கிறார்கள் நாங்கள் தலித்துக்கு விரோதிகள் அல்ல என்று தெரிவித்தார்.
மேலும் இன்று அரசியல் வந்தவர்களுக்கெல்லாம் நான் பதில் கூற முடியாது தயவு செய்து என்னிடம் அண்ணாமலையை பற்றி கேள்வி கேட்காதீர்கள்
ஒருவன் அரசியலுக்கு வந்தால் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாமா அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை என தெரிவித்து இருந்தார்.
PUBLISHED BY : S.vidhya