Site icon ITamilTv

mexico : தூக்கி வீசிய காளை! இளைஞர் படுகாயம்

mexico

mexico : தூக்கி வீசிய காளை! இளைஞர் படுகாயம்

Spread the love

மெக்சிகோவில் (mexico) நடைபெற்ற காளை சண்டை போட்டியில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

தமிழ்நாடு, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது காளையை அடக்கும் வீர விளையாட்டாகும்.

இதே போன்று மெக்சிகோவில் (mexico) காளை சண்டை மக்களிடையே பிரசித்தி பெற்றது. ஒரு பெரிய ஆடுகளத்தில், நன்கு பயிற்சி பெற்ற வீரர் ஒருவர் கையில் துணியுடன் நின்றிருப்பார்.

காளைக்கு ஆவேசம் ஏற்படுத்த கூடிய வகையில் இருக்கும் வண்ணத்தில் இருக்கும் துணியை அவர்கள் வைத்திருப்பார்கள்.

களத்திற்குள் காளை ஒன்று அவிழ்த்து விடப்படும். அந்த காளையை ஆத்திரமூட்டும் வகையில், வண்ண துணியை தன்முன் திரையாக காட்டியபடி அந்த வீரர் நிற்பார்.

அதனை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்து வரும் காளை, முட்ட வரும் போது அந்த வீரர் தன் மீது காளை முட்டாமல் லாவகமாக துணியை காட்டி விட்டு, விலகி விடுவார்.

இந்த காளை சண்டை போட்டி மெக்சிகோ நாட்டின் லக்ஸ்காலா மத்திய மாகாணத்தில் நடந்தது. இதில், ஜோஸ் ஆல்பர்டோ ஆர்டிகா என்ற 26 வயது வீரர் கையில் துணியுடன் ஆடுகளத்தில் மண்டியிட்டபடி காளைக்காக காத்திருந்தார்.

அப்போது, காளை அவரை ஆவேசத்துடன் நெருங்கியது. அப்போது அவர் விலகுவதற்குள் துணியுடன் அவரையும் சேர்த்து முட்டி சென்றது.

காளை முட்டியதும் தூக்கி வீசப்பட்ட அவர், சிறிது நேரத்திற்கு எழுந்து களத்தில் இருந்து நடந்து வெளியேறினார். ஆனால், அதன்பின்னர் சரிந்த அவரை உடனிருந்தவர்கள் உடனடியாக தூக்கி சென்றனர்.

https://x.com/Diario_Supremo/status/1756803359426666930?s=20

இதில், படுகாயமடைந்த ஆல்பர்ட்டோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க : கோவை குண்டுவெடிப்பு தினம்- போலீஸார் பலத்த பாதுகாப்பு

அவரின் கழுத்து பகுதி, தலை, காது, வாய் பகுதி உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் மெக்சிகோ நகரில், விலங்கு நல ஆர்வலர்கள் சட்ட போராட்டம் நடத்தி உள்ளனர். இதனால் காளை சண்டைக்கு தடை விதிக்க கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.


Spread the love
Exit mobile version