நேபாளத்தில், பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் தசரா கொண்டாடச் சென்ற 32 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
நேபாளத்தின் லும்பினி மாகாணம் பேங்கி மாவட்டத்தில் இருந்து முகு மாவட்டத்தை நோக்கி 45 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த பேருந்து மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் முன்பக்க டயர் திடீரென பஞ்சரானதால் நிலை தடுமாறிய பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்தவர்களில் 32 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியான நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் வெளியூர்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் என்றும், தசரா பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது..