ஸ்மார்ட் போன்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் போன்களின் இதைய துடிப்பாக விளங்கும் சிம் கார்டின் ரீசார்ஜ் விலையோ விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில் இணைய சேவையை பயன்படுத்த விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் & எஸ்.எம்.எஸ் வசதிகளை மட்டும் பயன்படுத்தும் வகையில் தனி ரீசார்ஜ் திட்டத்தை உருவாக்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
வாய்ஸ் கால் மட்டும் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர் கூட இணைய சேவையுடன் ரீசார்ஜ் செய்யும் திட்டம் தற்போது அமலில் உள்ளது.
Also Read : நடிகர் அல்லு அர்ஜுனின் தனிப் பாதுகாவலர் ஆண்டனி கைது..!!
TRAI உத்தரவிட்டுள்ள புதிய திட்டம் அமலுக்கு வந்தால் இணைய சேவையை பயன்படுத்த விரும்பாதவர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை.
இந்த திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தாமல் keypad போன்களை பயன்படுத்தும் நபர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.