இன்று இரவு முதல் 6 மணிநேரம் ரயில் முன்பதிவு வசதி நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நவம்பர் 14 ஆம் தேதியான இன்று இரவு முதல் நவ.20-ம் தேதி வரை இரவு 11:30 மணி முதல் வரை அதிகாலை 5:30 மணி வரை முன்பதிவு வசதி நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முந்தைய கால ரயில் சேவையை அமலுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் ரயில் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.