Site icon ITamilTv

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் முதல்முறையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட “டிரான்ஸ் கதீட்டர் மிட்ரல் வால்வ் சிகிச்சை”!

Spread the love

அதிக சவாலான இம்மருத்துவ செயல்முறை சென்னையை தவிர்த்து தமிழ்நாட்டில் செய்யப்படுவது இதுவே முதன்முறை.

8 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக செய்யப்பட்ட இந்த செயல்முறை மித்ராகிளிப் செயல்முறை என அழைக்கப்படும். 90 புதுமையான அணுகுமுறை உத்தியை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் HRD மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக பயன்படுத்தியிருக்கிறது. சென்னையைத் தவிர்த்த தமிழ்நாட்டின் பிற பகுதியில் முதன்முறையாக இந்த செயல்முறை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நோயாளிக்கு non-ischemic diated Cardiomyopathy with severe secondary Mitral Regurgitation (MR) என்ற பிரச்சனை இருந்தது. இதய செயலிழப்புக்காக CRT-D சிகிச்சையும் இவருக்கு செய்யப்பட்டிருந்தது. இப்பெண்ணின் இதய பிரச்சனைகள் காரணமாக திறந்தநிலை இதய அறுவைசிகிச்சை பொருத்தமான விருப்பத்தேர்வாக இருக்கவில்லை.

Mitral Regurgitation (MR) என்பது, ஒரு வகை இதய வால்வு நோயாகும். இடதுபக்க இதய அறைகளுக்கு இடையில் உள்ள வால்வு முழுமையாக மூடாத நிலையில் இருப்பதால் வால்வின் பின்னோக்கி இரத்தம் கசியும் பிரச்சனை இதில் இருக்கிறது. இந்த கசிவு கடுமையானதாக இருக்குமானால், போதுமான அளவு இரத்தம் இதயத்தின் வழியாக அல்லது உடலின் எஞ்சிய பகுதிகளுக்கு செல்லாது. இதயத்தின் இடது மேலறைக்குள்ளும் மற்றும் நுரையீரல்களுக்குள்ளும் பின்னோக்கி இரத்தம் கசிவதை இது உருவாக்கும்; இதனால், இதய செயலிழப்பும் மற்றும் நுரையீரல் அடைப்பும் ஏற்படும்; இதற்கும் கூடுதலாக உயிரிழப்பு கூட நேரலாம்.

MMHRC-யின் இருதய நுண்துளை முதுநிலை சிகிச்சை நிபுணர் டாக்டர். ஆர். சிவகுமார் கூறியதாவது: ‘கடுமையான Mitral Regurgitation (MR) நிலையால் அவதியுறும் மற்றும் வேறுபிற விருப்பத்தேர்வுகள் இல்லாத நோயாளிகளுக்கு பயன்படுத்தக்கூடிய இந்த புதுமையான மருத்துவ செயல்முறையை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

பெரிய அளவிலான அறுவைசிகிச்சை இல்லாமலேயே உயிருக்கு ஆபத்தான பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க ஒரு பாதுகாப்பான. திறன்மிக்க வழிமுறையை இது வழங்குவதால் இதயவியல் சிகிச்சையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்துவதாக மிட்ராகிளிப் இருக்கிறது. இப்பெண்மணிக்கு செய்யப்பட்ட இப்புதுமையான சிகிச்சை செயல்முறை குறித்து பேசுகையில், “அப்பெண்ணின் வலது தொடையில் உள்ள சிரை வழியாக ஒரு 3DTEE உதவியுடன் ஒரு குறிப்பிட்ட அமைவிடத்தில் ஏட்ரிய இடைச்சுவரில் துளையிடப்பட்டது; சாத்தியமுள்ள சிறந்த நிலையில் மிட்ரல் வால்வின் இரண்டு இதழ்களை பிடித்து மிட்ராகிளிப் இதயத்திற்கு

இதய மயக்கமருந்தியல் துறை தலைவர் டாக்டர். எஸ். குமார் பேசுகையில், பல்வேறு சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவால் திட்டமிடப்பட்ட இந்த துல்லியமான சிகிச்சை திட்டம் நோயாளிக்கு சிறப்பான விளைவுகளை தந்திருக்கிறது. மயக்கமருந்தின் கீழ் செய்யப்பட்ட, செயல்முறையை செய்து முடிக்க சில மணிநேரங்கள் ஆனது இச்செயல்முறைக்கு பிறகு அவரது அறிகுறிகளில் கணிசமான முன்னேற்றம் தென்பட்டது.

சிக்கல் ஏதும் இல்லாமல் அளிக்கப்பட்ட இம்மருத்துவத்தால் தொடர்ந்து 3 நாட்களில் அவர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆரோக்கியமான மற்றும் அதிக நிறைவான வாழ்க்கையை மீண்டும் தொடங்கும் பாதையில் இப்போது அவர் பயணிக்க தொடங்கியிருக்கிறார். அறுவைசிகிச்சைக்கு அதிக இடர்வாய்ப்பு இந்நோயாளிக்கு இருந்ததால் ஊடுருவல் அல்லாத மருத்துவ செயல்முறையும், மிட்ராகிளிப் உத்தியும் இச்சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டன. என்று கூறினார்.

இதய அறுவைசிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் ஆர்எம் கிருஷ்ணன் மற்றும் இத்துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ராஜன் ஆகியோர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,” கடுமையான மிட்ரல் வால்வில் பின்னோக்கிய இரத்தக்கசிவுக்கான சிகிச்சையில் பெருமிதப்படக்கூடிய ஒரு முன்னேற்ற நடவடிக்கை இன்றைய நாளில் சாத்தியமாகியிருக்கிறது. MMHRC-யில் மிட்ராகிளிப் செயல்முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருப்பது மருத்துவ மேம்பாடுகளில் தொடர்ந்து முன்னணியில் இருக்க வேண்டும் என்ற வெளிப்படுத்துகிறது.

நோயாளிகளுக்கு கிடைக்கும் சிறந்த சிகிச்சை விளைவுகளை எமது மருத்துவமனையின் மேலும் மேம்படுத்துவது எங்களது அர்ப்பணிப்புக்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று குறிப்பிட்டனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்வின்போது MMHRC-யின் மருத்துவ நிர்வாக டாக்டர். பி. கண்ணன் அவர்களும் கலந்துகொண்டார். தமிழ்நாட்டில் மிகச்சிறப்பான இதயவியல் சிகிச்சை மையங்களுள் ஒன்றாக மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மிகச்சிறப்பான சேவையை வழங்கி வருகிறது.


Spread the love
Exit mobile version