தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து வசதி கிடையாது. போக்குவரத்து துறை மிகப் பெரிய நஷ்டத்தில் இருக்கிறது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது :
ஆம்னி பேருந்துகளுடைய புகார்கள் கடந்த ஆண்டை விட தற்போது குறைந்துள்ளது, எந்த ஆம்னி பேருந்துகள் என்று என்னுடன் தெரிவித்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன்.
நாம் ஜெர்மன் வங்கியின் நிதி உதவியுடன் பேருந்து வாங்குகிறோம், நம் ஊருக்கு ஏற்றது போல் சில மாற்றங்கள் செய்து பேருந்துகள் வரவுள்ளது. தற்பொழுதும் பொதுமக்களிடம் இருந்து புதிய கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது, அதையும் நாங்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியுள்ளோம்.
தாழ்தள பேருந்து என்பது மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக நீதிமன்றம் வழங்கிய அறிவுரைப்படி வாங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நான் இருக்கிறேன், எங்களை வழி நடத்துபவர் முதலமைச்சர். எங்களுக்கு தெரியாமல் பேருந்து கட்டண உயர்வு அன்புமணிக்கு மட்டும் எப்படி தெரிந்தது? என்பதுதான் நீங்கள் சொல்ல வேண்டும்.
தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து வசதி கிடையாது. போக்குவரத்து துறை மிகப் பெரிய நஷ்டத்தில் இருக்கிறது, கட்டணத்தை உயர்த்த வேண்டுமென தொழிலாளர்களே கூறி வருகிறார்கள்.
தனியார் பேருந்து உரிமையாளர்களும் இந்த கருத்தை தெரிவித்து வருகிறார்கள். நம் மக்கள் மீது அந்த சுமையை ஏற்றக்கூடாது என்பதற்காக அந்த எண்ணத்தில் தான் இதுவரை பேருந்து கட்டணம் உயர்த்தப்படாமல் இருக்கிறது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.