திருச்செந்தூர் கடற்கரையில் சுமார் 200 ஆண்டுகள் பழைமையான சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர் . திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் குடும்பத்துடன் கடலில் நீராடி மகிழ்வதை வழக்கமாக வைத்துள்ளனர் .
Also Read : ஊழியர்களுக்கு அக்னிப் பரீட்சை – சர்ச்சைக்குள்ளாகும் சீன நிறுவனத்தின் செயல்..!!
இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடலில், சமீப காலமாக கடல் சீற்றம், கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கடலில் இருந்து பல்வேறு விதமான வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுகள் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்று வருகின்றன.
அந்தவகையில் தற்போது திருச்செந்தூர் கடற்கரையில் 200 வருடங்கள் பழைமையான சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிற்பங்கள் தொல்லியல் துறை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .