ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், ‘வாழ்ந்து காட்டுவோம்’ கூட்டத்திற்கு உற்பத்தியாளர் மற்றும் சந்தையாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக விளையாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயளாக்குத்துறை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக உற்பத்தியாளர்களால் சந்தைப்படுத்துவதற்கான கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டு, உற்பத்தி சந்தையில் வெற்றி பெற்றவர்களுடைய புத்தக தொகுப்பை வெளியிட்டார்.
இத்திட்டம்53 உற்பத்தியாளர்களை ஒன்றிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வில் சிறப்பு திட்ட செயலாக்குத்துறை முதன்மை செயல் அலுவலர் திவ்யதர்ஷினி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் முனைவர் செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள்
சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், இனிகோஇருதயராஜ், பழனியாண்டி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதிஸ்டாலின்..
முதலமைச்சருடைய கட்டளையை ஏற்று மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் அவர்கள் தயாரிக்கின்ற பொருட்களை வாங்குவதற்கான சந்தை குழுக்களை இணைக்கின்ற வகையில், தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக இந்த கூட்டம் திருச்சியில் நடைபெறுகிறது என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். மேலும், இதை தொடங்கி வைப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நான் அமைச்சராக பொறுப்பேற்ற போது நான் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சருடைய தலைமையில் திருச்சிக்கு வந்து உங்களை எல்லாம் சந்தித்து 3,72,424 மகளிர் சுகர் குழுக்களுக்கு 1756 கோடி ரூபாய் அளவுக்கு வங்கி கடன் இணைப்புகளை வழங்கினோம்.
மேலும், பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த மணிமேகலை விருதுகளை ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் 33 பயனளிகளுக்கு வழங்கினோம். பொருளாதார சுதந்திரமே பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் அப்படின்னு நம்முடைய தந்தை பெரியார் அவர்கள் கூறினார்கள். அந்த வகையில் தான் மகளிர் முன்னேற்றத்திற்காக மகளிர் சுய உதவி குழுக்கள் என்னும் ஒரு முக்கியமான முன்னறிப்பை இந்திய நாட்டிலேயே முதன்முதலாக 1989 ஆம் ஆண்டு நம்முடைய முத்தமிழ் கலைஞர் அவர்கள் தான் இந்த திட்டத்தை உருவாக்கினார்கள்.
தர்மபுரி மாவட்டத்தில், தொடங்கப்பட்ட இந்த திட்டம் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு இன்றைக்கு தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சத்து 22,000 கொடுத்தால் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த குழுக்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். நீங்கள் இத்தனை பேர் மகளிர் சுய உதவி குழுக்களில் இணைந்திருக்கிறீர்கள் என்றால் அந்த அளவுக்கு சுய உதவி குழுக்கள் உங்களுடைய வாழ்வில் ஒளி ஏற்று வைத்திருக்கிறது, என்பது ஒரு மிகச் சிறந்த உதாரணம் ஆகும்.
இன்றைக்கு இந்த குழுக்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து கிராமப்புறங்களில் சத்தமில்லாமல் ஒரு மிகப்பெரிய தொழில் புரட்சியை உங்கள் மூலம் செய்து கொண்டிருக்கின்றன, நீங்கள் தயாரிக்கும் பொருட்களானது ஒரு தனி முக்கியத்துவம் இருக்கின்றது.
மிகப்பெரிய பிராண்ட் தயாரிக்கின்ற பொருட்கள் மீது வராத நம்பிக்கை ஒரு கிராமத்தில் நீங்கள் தயாரிக்கின்ற அந்த பொருட்கள் மீது அந்த நம்பிக்கை வந்திருக்கின்றது . அந்த அளவுக்கு உங்களுடைய பொருட்கள் தரமானதாக இருக்கின்றது.
எனக்கு யாருக்காவது பரிசளிக்க விரும்பினால், கூட அவர்களிடம் நான் அன்பு வேண்டுகோளாக அடிக்கடி சொல்வது தயவு செய்து பூங்கொத்து, பொன்னாடையை தவித்து விடுங்கள் என்று கூறினேன். குறிப்பாக புத்தகங்கள் கொடுங்கள் இல்லையென்றால் மகளிர் சுதந்திர குழுக்கள் தயாரித்திருக்கின்ற பொருட்களை எனக்கு பரிசாக நீங்கள் கொடுங்கள் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன்.
அதுமட்டுமல்ல சட்டமன்றத்திலும் நான் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் வைத்து இருக்கிறேன்.
மகளிர் குழுக்கள் தயாரிக்கின்ற பொருட்கள் அவ்வளவு தரமானதாக இருந்திருக்கிறது என்றார்.