இந்திய மீதான அமெரிக்க வரிகளுக்கான காலக்கெடு புதன்கிழமை காலையோடு முடிவடைந்தது. இதைத் தொடந்து இந்திய பொருட்களுக்கான வரிகளை இரட்டிப்பாகி 50% ஆக உயர்த்தியுள்ளது அமெரிக்கா. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தககே கூட்டாளியான அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு, இந்தியாவிற்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என பெருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

வரி இரட்டிப்பின் பின்னணி:
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதுவும் இல்லாததால், ஆகஸ்ட் 1 தேதிக்கு முன்பு வரை 25% வரியை அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணெய் இறக்குமதி செய்தால் 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என இந்தியாவை எச்சரித்திருந்தார்.
இதற்கு ஆகஸ்ட் 27 வரை தான் காலக்கெடு எனவும் எச்சரிக்கப்பட்டது. இந்த காலக்கெடு முடிவடைந்தநிலையில், எச்சரித்தப் படி, கூடுதல் 25% வரியை அமல்படுத்தியுள்ளது அமெரிக்கா.
இந்த நிலையில், இந்தியாவின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியா தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வரிகள் இந்தியாவை எவ்வாறு பாதிக்கின்றன?
2024 ஆம் ஆண்டின் மொத்த ஏற்றுமதியில் $86.5 பில்லியன் மதிப்புடன், இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா இருந்தது. இந்த 50% வரி ஆடைகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், காலணிகள், விளையாட்டுப் பொருட்கள், இறால் மற்றும் ரசாயனங்கள் போன்ற பொருட்களுக்கான வரிகளை அதிகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மருந்துகள் மற்றும் கணினி சிப்கள் போன்ற துறைகளுக்கு கட்டண விலக்குகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன.
உலகலாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி (GTRI) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த வரிகள் 60.2 பில்லியன் டாலர் (€52 பில்லியன்) மதிப்புள்ள இந்திய ஏற்றுமதிகளைப் பாதிக்கும் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவின் தொழிலாளர் மிகுந்த துறைகளின் ஏற்றுமதியில் 70% சரிவை எதிகொள்ள போவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பாதிப்பு என்னவாக இருக்கும்:
அமெரிக்க வரி விதிப்பால் கோயம்புத்தூரின் பொறியியல் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படும் என கொடிசியா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். கோவையிலிருந்து அமெரிக்காவுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.4,000 கோடி மதிப்பிலான உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவையிலிருந்து கெமிக்கல் மற்றும் ஸ்லர்ரி பம்புகள், வால்வுகள், மைனிங் மற்றும் க்ரஷிங் இயந்திர உதிரிபாகங்கள், கனரக ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், காற்றாலை உதிரிபாகங்கள் போன்றவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய்யப்படுகிறது.
தமிழ்நாட்டின் ஜவுளித்துறையில் திருப்பூர் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு ரூ.12,000 கோடி மதிப்பிலான பொருட்கள் இங்கிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் அமைப்பின் தலைவரான கே.எம்.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். திருப்பூரிலிருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும் அமெரிக்கா தான் மிகப்பெரிய சந்தையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உணவு பொருட்களில் முட்டை மற்றும் ஐடி துறைகளிலும் எந்த பாதிப்பும் பெரிதாக இருக்காது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.