தீபாவளி ஸ்பெஷல் : பூண்டு பாயசம்.. வேறலெவல் டேஸ்ட்.. ரெசிபி உள்ளே!!

என்னது பூண்டில் பாயசமா? என்று வினோதமாக தோன்றலாம். ஆனால் இது முகாலயர் காலத்தில் செய்யப்பட்ட ஒரு பாரம்பரியமான இனிப்பு வகை. அந்தவகையில், முகலாய பூண்டு பாயாசம் செய்வது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

தேவையான பொருட்கள் :

  • பூண்டு – 50 -75 கிராம்
  • பசும் பால் – 1 லிட்டர்
  • சர்க்கரை 4 – டீஸ்பூன்
  • குங்குமப்பூ – 1 தேக்கரண்டி
  • வெட்டப்பட்ட உலர்ந்த பழங்கள் – 3 டீஸ்பூன்
  • 5 பொடித்த ஏலக்காய்

செய்முறை :

முதலில், அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு அடி கனமான கடாய் ஒன்றை அடுப்பின் மீது வைக்க வேண்டும்.

பின்னர், கடாயில் பசும்பாலை ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். பால் நுரை வரவர பால் ஏடை ஒதுக்கி ஒதுக்கி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். முக்கியமாக பால் அடி பிடித்து விடாமல் கரண்டியால் கிளறிக் கொண்டே பாலை நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும்.

அதன் பின்னர், வற்றிய பாலுடன் குங்குமப்பூ மற்றும் ஏலக்காயை சேர்த்து அதோடு உலர் பழங்கள் மற்றும் சர்க்கரையையும் சேர்க்க வேண்டும்.

பக்கத்தில் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் தண்ணீரில் எடுத்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்க்க வேண்டும்.

இப்படி நான்கு முதல் ஐந்து முறை வரை பழைய தண்ணீரை மாற்றி மாற்றி பூண்டு பற்களை வேக வைக்க வேண்டும். அதன் பின்னர் வேகவைத்த பூண்டை தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது வேக வைத்துள்ள பூண்டை லேசாக கரண்டியால் நசுக்கி வேகவைத்த பாலுடன் சேர்த்து நான்கு முதல் ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

அதன் பின்னர் உலர் பழங்கள் மற்றும் பருப்புகள் சேர்த்தால் சுவையான முகலாயர் பூண்டு பாயாசம் தயார்..

அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து அதன் பின்னர் பரிமாறலாம். இல்லையெனில் சூடாகவும் பரிமாறலாம்.

Total
0
Shares
Related Posts