கடலூர் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் பயணிகளும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் உறவினர்களும் மற்றும் தொண்டர்களும் விரைவில் குணம் பெற பிராத்திப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சுமார் 5 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
மேலும் இந்த விபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கடலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் திருமதி.சிவகாமி அவர்களின் மகனும், கடலூர் மத்திய மாவட்டக் கழக துணைச்செயலாளர் திரு.ஜெயகாந்தன் அவர்களின் மனைவியும் மற்றும் கழக தொண்டர்கள் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி மேலும் வேதனையளிக்கிறது.
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் பயணிகளும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் உறவினர்களும் மற்றும் தொண்டர்களும் விரைவில் குணம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.