தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் புதிதாக தொடங்கப்பட்ட தவெக கட்சி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பாக்கப்படுகிறது.
விக்கிரவாண்டியில் தனது முதல் மாநாட்டை நடத்திய விஜய், மதுரையில் தனது இரண்டாவது மாநாட்டை சமீபத்தில் மதுரையில் நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, மக்களைச் சந்திக்க விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியானது. இந்த சுற்றுப்பயணத்தை வரும் 13ஆம் தேதி முதல் தொடங்குவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாதுகாப்பு அளிக்க கோரி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தார்.
இந்த நிலையில், விஜய்யின் சுற்றுப்பயண விவரம் வெளியானது.
எந்த தேதியில் எங்கே பயணம்?
விஜய் எந்த தேதியில் எங்த பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்னும் விவரம் பின்வருமாறு:
- செப். 13, 2025 – திருச்சி, பெரம்பலூர், அரியலூர்
- செப். 20, 2025 – நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை
- செப். 20, 2025 – திருவள்ளூர், வட சென்னை
- அக்.4 மற்றும் அக்.5, 2025 – கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு
- அக். 11, 2025 – கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி
- அக். 18, 2025 – காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை
- அக். 25, 2025 – தென்சென்னை, செங்கல்பட்டு
- நவ.1, 2025 – கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்
- நவ.8, 2025 – திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்
- நவ.15, 2025 – தென்காசி, விருதுநகர்
- நவ.22, 2025 – கடலூர்
- நவ. 29, 2025 – சிவகங்கை, ராமநாதபுரம்.
- டிச.6, 2025 – தஞ்சை, புதுக்கோட்டை
- டிச.13, 2025 – சேலம், நாமக்கல், கரூர்
- டிச. 20, 2025 – திண்டுக்கல், தேனி, மதுரை

வாரத்தில் ஒருநாள் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் தவெக தலைவர் விஜய். அக்டோபர் 5ம் தேதி மட்டும் ஞாயிற்றுக்கிழமை ஆகும்.
காவல்துறையின் அனுமதி கிடைக்காத காரணத்தால் இந்த விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை எனகே கூறப்படுகிறது.
இந்த சுற்றுப்பயணத்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.