கொல்கத்தாவில் பாஜக நடத்திய முற்றுகை போராட்டத்தின்போது, காவல்துறை அதிகாரிகளை பாஜகவினர் கும்பலாக சேர்ந்து கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசைக் கண்டித்து கொல்கத்தாவில் உள்ள சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தை பாஜக நடத்தியது. இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி பெறாமல் தடையை மீறி பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த பேரணியை தடுப்புகளை கொண்டு காவல்துறை கட்டுப்படுத்தியபோது, காவல்துறையினருக்கும் பாஜகவினருக்குமிடையே காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து முற்றுகை போராட்டத்திற்காக ரயில்கள், பேருந்துகள் மூலமாக கொல்கத்தாவிற்கு பாஜகவினர் வருகை தந்தனர். கடும் கட்டுப்பாடுகளோடு போடப்பட்டு காவல்துறையினர் சோதனை செய்து பாஜக தொண்டர்களை கைது செய்தனர்.
पुलिस पर हमला करने वाले गुंडों को कपड़ों और झंडो से पहचानिए। pic.twitter.com/HZj3cKrhfZ
— Vinod Kapri (@vinodkapri) September 13, 2022
சட்டப்பேரவைக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், வந்த பாஜக தலைவர்கள் சுவேந்து அதிகாரி, ராகுல் சின்ஹா , லாக்கெட் சாட்டர்ஜீ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு கொல்கத்தாவில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரின் வாகனத்திற்கு போராட்டக்காரர்கள் திடீரென்று தீவைத்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. அப்போது போராட்டம் கலவரமாக மாறி, காவல்துறையினர் மீது பாஜகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
BJP leaders Modi and Shah are making them terrorists the youth of the country, then both are dangerous for India. #ShameOnBJP pic.twitter.com/9EYIcbnTA9
— M L SHARMA (@motilalsharmaa) September 13, 2022
அப்போது, பாஜகவினர் சிலர் கொடி கட்டப்பட்ட கைத்தடிகளில் காவல்துறை துணை ஆணையரை கடுமையாக தாக்கினர். இதனால் வலி தாங்கமுடியாமல் தடுமாறியபடி, ஆணையர் ஓடினார். அப்போதும் விடாமல் துரத்திய பாஜக கும்பல் அவரை விடாமல் கொடூரமாக தாக்கியது. இந்த நிலையில், காவல்துறைமீது பாஜகவினர் கொடூர தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ShameOnBJP என்ற ஹேஷ்டாகை பயன்படுத்தி டுவிட்டரில் நெட்டிசன்கள் டிரெண்ட்டாக்கி வருகின்றனர்.
Only chanting Jay Sree Ram won't make u innocent @BJP4Bengal.
This the clip of yesterday's BJP GUNDAMI.
Such criminals of BJP should be in jail.
We the people of bengal won't tolerate such things.#ShameOnBJP pic.twitter.com/3tWRvtWu85— Aritro Saha (@aitcRicky) September 14, 2022