திருப்பூர் மாவட்டத்தில் ஒரே பெண்ணை இருவர் காதலித்தால் இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் .
ஆண்டிபாளையம் அடுத்த முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் அஜித் மற்றும் ஹரி .இவர்கள் இருவரும் தனியார் நூல் ஆலை நிறுவனத்தில் ஊழியர்களாக பணியாற்றிவரும் இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர் .
மேலும் இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் ,அஜித்தின் வீட்டிற்கு சென்ற ஹரி அவரது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ,இதனால் ஆத்திரம் அடைந்த ஹரியின் ராஜ்குமார் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் படபியூகாயம் அடைந்தனர் .
இது தொடர்பாக CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .மேலும் காவல் துறையினர் அஜித்தின் தம்பி சக்திவேலை கைது செய்து மற்றும் எதிர் பகுதியை சேர்ந்த அஜித்தின் தயார் ஆகியவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்