கேரளாவில் முன்னாள் சென்ற கார் திடீரென நின்றதால் பின்னல் இருசக்கர வாகனத்தில் வந்த ( kerala accident ) பெண்ணுக்கு நேர்ந்த சோக சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சி பகுதியில், காரில் வந்த ஒருவர் திடீரென காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கியுள்ளார். இதனால் அவருக்கு பின்னால் பைக்கில் வந்தவர், சற்று நிலைத்தடுமாறியிருக்கிறார்.
இதில் பைக்கில் பயணித்த பெண் சில நொடிகளில் தவறி கீழே விழுந்துள்ளார் . அந்நேரத்தில் பின்னல் வந்த லாரி, அப்பெண்ணின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார் .
Also Read : வறட்சியால் கருகும் தென்னை மரங்கள் – இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்..!!
பைக்கில் இருந்த அப்பெண்ணின் கணவரும், 6 வயது மகனும் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6 வயது மகனின் கண்முன்னே தாய் நொடிப்பொழுதி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் ( kerala accident ) அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.