ITamilTv

கோவையில் சாலையை கூட்டி பெருக்கிய நிதியமைச்சர்..!!

Spread the love

கோவை பீளமேடு பகுதியில் நடத்தப்பட்ட தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் (nirmala sitharaman) தூய்மை பணிகளை மேற்கொண்டார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்(nirmala sitharaman) கோவையில் இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.

முதல் நிகழ்வாக பீளமேடு பகுதியில் பல்வேறு வங்கிகளின் சார்பில் நடத்தப்பட்ட தூய்மை பாரத நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு வங்கி அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களோடு சேர்ந்து தூய்மை பணிகளை மேற்கொண்டார்.

இந்நிகழ்வின் போது கனரா வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் கோவை மாநகராட்சி தூய்மை பணிகளுக்காக வங்கி அதிகாரிகள் சார்பில் காசோலைகள் வழங்கப்பட்டது.


Spread the love
Exit mobile version