உ.பி. கொடூரம்: ”திட்டமிட்ட கொலை” – அதிர்ச்சி வீடியோ வெளியானது

உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் பகுதியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நட த்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 3ஆம் தேதி நடந்த போராட்டத்தின்போது, வாகனம் ஒன்று வேகமாக புகுந்து விவசாயிகள் மீது மோதியது.

இந்த கொடூர சம்பவத்தில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விவசாயிகள் மீது மோதிய காரை ஓட்டியது ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா என கூறப்படுகிறது.

Up Farmers Killed

இந்த கொடூர நிகழ்வை கண்ட விவசாயிகள் ஆத்திரமடைந்து, அந்த காரை அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்தினர். மேலும் இதனையடுத்து ஏற்பட்ட மோதலில் 9 பேர் உயிரிழந்த தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், காரை ஒருவர் வேகமாக இயக்கி விவசாயிகள் மீது மோதுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் காங்கிரஸ் தனது டுவிட்டர் பதிவில், மனதை உலுக்கும் லக்கிம்பூர் காட்சிகள், இந்த விவகாரத்தில் மோடி அரசு கடைபிடிக்கும் மௌனமே இந்த கொலைக்கான உடந்தையை உறுதிப்படுத்துகிறது” என பதிவிட்டுள்ளது.

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய உபி விவசாயிகள் கொல்லப்பட்ட நிகழ்வின் வீடியோ வெளியாகி இருப்பது காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த கார் விபத்து திட்டமிட்டு நடத்தப்படுள்ளதாக காங்கிரஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் இந்த வீடியோவை பிரியங்கா காந்தியும்  தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Total
0
Shares
Related Posts