விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 150 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் உள்ள நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சி, மாநகராட்சிகள் வார்டு எண்ணிக்கை நிர்ணயம், எல்லை வரையறை தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வாக்காளரின் படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடுகிறது.
இந்நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் வழங்குதல், காலி பதவியிடங்களாக உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகிய பதவியிடங்களை விரைவாக நிரப்புதல், தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.