Site icon ITamilTv

அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு கொரோனா – ஜி20 மாநாட்டில் பைடன் கலந்து கொள்வதில் சிக்கல்!!

Spread the love

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வரவுள்ள நிலையில், அவரது மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் மாநாட்டில் பைடன் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த தகவலை வெள்ளை மாளிகை உறுதி படுத்தியுள்ள நிலையில், அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அதிபர் ஜோ பைடனுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் வெள்ளை மாளிகை தற்போது தெரிவித்துள்ளது.

மேலும், சீரான இடைவெளியில் அதிபர் ஜோ பைடனுக்குகொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு, தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்படும் எனவும் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜோ பைடனின் அதிகாரப்பூர்வ பயண அட்டவணையில் அவர் இந்தியா பயணம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பயண அட்டவணையானது அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வெளியான அறிவிப்புக்கு பின்னர் வெளியிடப்பட்டது.

எனவே, ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிச்சயம் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஜில் பைடனுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பரிசோதனையில் அவருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதனால, அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இல்லை என்றே தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்காவில் சமீபத்திய வாரங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


Spread the love
Exit mobile version