ஹிரோஷிமாவில் வீசப்பட்டதை விட சக்திவாய்ந்த அணுகுண்டுகளை தயாரிக்க அமெரிக்கா திட்டம்..!!

ஹிரோஷிமாவில் வீசப்பட்டதை விட சக்திவாய்ந்த அணுகுண்டுகளை தயாரிக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பண்டைய காலத்தில் போர் என்றால் அதில் வாள் , வில் அம்பு , உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தியும் யானை , குதிரை , புலி , என மிருகங்களை பயன்படுத்தியும் சண்டையிட்டு வந்தனர் . காலம் நகர வாள் , வில் அம்பு துப்பாக்கியாய் மாறிட மிருகங்கள் சென்று இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வர பின்னர் போர் விமானம்கள் என இன்று வரை காலத்திற்கேற்ப போர் முறைகளும் மாறி வருகிறது.

இன்று வரை இரண்டு மிகப்பெரிய உலகப்போர்களை கண்டுள்ள மனித இனம் கடந்த சில வருடங்களாக சில உள்நாட்டு போர்களை சந்தித்து வருகிறது. அந்தவகையில் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்கா தங்களது போர் ஆயுதங்களை மேலும் வலிமை படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும் குறிப்பாக இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டுகளை விட 24 மடங்கு சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை தயாரிக்க அமெரிக்க பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி நாளுக்கு நாள் மாறிவரும் பாதுகாப்புச் சூழல் மற்றும் எதிரிகளின் அச்சுறுத்தலே முடிவுக்கு முக்கிய காரணம் என அமெரிக்க பாதுகாப்பு துறை துணை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts