ரஷ்யா – உக்ரைன் போர் நிறைவுக்கு வர இருக்கும் நிலையில் தற்போது உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேட்டோ அமைப்புடன் உக்ரைன் நாடு சேர விரும்பிய காரணத்திற்காக அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போர் தொடுத்தது . நெடு நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இந்த போரில் இரு நாட்டு தரப்பிலும் உயிர் சேதங்கள் அதிகமாகி உள்ளது .
இதற்கிடையில் இந்த போரை முடிவுக்கு கொண்டுவருமாறு பல அமைப்புகளும் பல நாட்டின் தலைவர்களும் இரு நாட்டு அதிபர்களிடம் பேசி வந்த நிலையில் அமெரிக்கா பண ரீதியாகவும் பொருள் ரீதியாகவும் உக்ரைன்க்கு ஆதரவு கொடுத்து வந்துள்ளது.
Also Read : கூட்டணியில் நெருக்கடியா? – திருமாவளவன் பரபரப்பு பேட்டி..!!
இந்நிலையில் அமெரிக்க அதிபராக மீண்டும் டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த போரை நிறுத்த அனைத்து முயற்சிகளையம் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் உக்ரைனுக்கான அனைத்து ராணுவ உதவிகளையும் உடனடியாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் குறித்து நல்ல முடிவு ஏற்படும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம் கொடுத்துள்ளார். அமெரிக்காவில் ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே கடந்தவாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, உக்ரைனுக்கான உதவிகளை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.