உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மணா என்ற கிராமம் உள்ளது. பத்ரிநாத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம் இந்தியா-திபெத் எல்லையில் 3,200 மீட்டர் உயரத்தில் உள்ள கடைசி கிராமமாகும்.
இந்த கிராமத்தில் நேற்று அதிகாலை தீடிரென நிலச்சரிவு ஏற்பட்டது. ஏற்கெனவே அப்பகுதியில் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது .
Also Read : சொல்வதைக் கேட்கவில்லை என்றால் ஆதரவு இல்லை – உக்ரைன் அதிபருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!!
திடீரென ஏற்பட்ட இந்த பனிச்சரிவின்போது ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் பணி செய்து வந்த 57 தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியானது. இதை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய மீட்பு படையினர் மற்றும் மருத்துவ குழுவினர் தீவிரமாக மீட்பு பணியில் இறங்கினர்.
சுமார் 65க்கும் மேற்பட்ட மீட்பு பணியினரின் தொடர் போராட்டத்திற்கு பிறகு, பனிச்சரிவில் சிக்கியிருந்த 33 தொழிலாளர்களை மீட்டனர். இதில் சிலரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் அவர்களுக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சையளித்து வருகிறது . மேலும் எஞ்சியிருக்கும் 8 பேரை மீட்பதில் இரண்டாவது நாளாக மீட்புபணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.