இந்தியாவின் பெருமை மிக்க இஸ்ரோவின் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மேலக்காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த வி.நாராயணன் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1984ல் இஸ்ரோவில் இணைந்த வி.நாராயணன், 40 ஆண்டுகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துவந்துள்ளார்.
திருவனந்தபுரம், வல்லியமாலாவில் உள்ள திரவ உந்துவியல் மையத்தின் இயக்குநராக இருந்து வந்த நிலையில் தற்போது அவரை இஸ்ரோவின் தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது.
பிஎஸ்எல்வி சி57, சூரிய ஆய்வுக்கான ஆதித்யா, ஜிஎஸ்எல்வி எம்.கே 3, சந்திரயான் 2, 3 திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் வி.நாராயணன்.
ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர் வி. நாராயணன் . 183 திரவ உந்துவிசை திட்டம், கட்டுப்பாட்டு அமைப்புகளை வி.நாராயணன் தலைமையிலான குழு இஸ்ரோவுக்கு வழங்கியுள்ளது.
இந்தியாவின் மதிப்பு மிக்க இஸ்ரோவின் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.